/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/விதிமீறிய பெண் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்விதிமீறிய பெண் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
விதிமீறிய பெண் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
விதிமீறிய பெண் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
விதிமீறிய பெண் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
ADDED : ஜூலை 08, 2024 07:12 AM
ஈரோடு, : ஈரோட்டில், காவிரி சாலை கிருஷ்ணா தியேட்டர் அருகே, வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார், நேற்று மாலை, 5:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் பெண் வாகன ஓட்டிகள் லைசன்ஸ் பெற்று வாகனங்களை இயக்குகின்றனரா, ஆர்.சி.புத்தகம், ஹெல்மெட் அணிதல், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் சரிவர உள்ளனவா என சிறப்பு கவனம் செலுத்தப்-பட்டது.
அதாவது பிரதானமாக பெண் வாகன ஓட்டிகள் வாகன தணிக்-கைக்கு உட்படுத்தப்பட்டனர். மொத்தம், 140 வாகனங்களில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் விதிமீறல் கண்டுபிடிக்-கப்பட்ட, 70 வாகனங்களுக்கு மொத்தமாக, 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பெண் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிதல், டிரைவிங் லைசன்ஸ் பெறுதல், இன்சூரன்ஸ் குறித்து அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.