Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அழகை அதிகரிக்க லேசர் சிகிச்சை அளிக்கும் மயில் மருத்துவமனை

அழகை அதிகரிக்க லேசர் சிகிச்சை அளிக்கும் மயில் மருத்துவமனை

அழகை அதிகரிக்க லேசர் சிகிச்சை அளிக்கும் மயில் மருத்துவமனை

அழகை அதிகரிக்க லேசர் சிகிச்சை அளிக்கும் மயில் மருத்துவமனை

ADDED : ஜூலை 01, 2025 01:10 AM


Google News
ஈரோடு, ஈரோட்டில் பெருந்துறை ரோட்டில், கிளப் மெலாஞ்ச் வளாகத்தில், மயில் லேசர் தோல் மற்றும் பல் மருத்துவமனை, 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. டாக்டர் சக்ரவர்த்தி மயிலேறு ரவீந்திரன், தோல், லேசர் அழகியல் மற்றும் அலர்ஜி மருத்துவர் மற்றும் டாக்டர் பிருந்தா, பல் மற்றும் லேசர் அழகியல் மருத்துவர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஈரோட்டில் முதன்முறையாக தோல் லேசர் சிகிச்சையை அறிமுகபடுத்தியதும் இவர்களே.

இதுகுறித்து டாக்டர் சக்ரவர்த்தி மயிலேறு ரவீந்திரன் கூறியதாவது: லேசர் சிகிச்சையில் மச்சம், பரு, கால் ஆணி, கரும்புள்ளிகளை அகற்றலாம். வேவ்லென்த் லேசர் மூலம் தேவையற்ற முடிகளை அகற்றலாம். வயது முதிர்ச்சியால் சருமத்தில் ஏற்படும் கறை, சுருக்கங்களை 'ஸ்கின் டோனிங் போன்ற லேசர் சிகிச்சையில் நீக்கலாம்.

லேசர் ஸ்கின் டோனிங் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது சருமத்திற்கு மேற்புறத்தில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. இதனால் தோலில் உள்ள பருக்கள், துளைகள், கோடுகள், சுருக்கங்கள், சீரற்ற நிறம் போன்ற குறைபாடுகள் அகற்றப்படுகின்றன. இதன் மூலமாக இறுக்கமான, பளபளப்பான, மாசு மருவில்லாத இளமையான சருமத்தை பெற முடிகிறது.

மேலும் விவரங்களுக்கு மயில் லேசர் ஸ்கின் கிளினிக் மருத்துவர்களை, 94432-35812, 80988- 59181 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us