/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கனிம வள திருட்டுக்கு கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய முறையீடு கனிம வள திருட்டுக்கு கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய முறையீடு
கனிம வள திருட்டுக்கு கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய முறையீடு
கனிம வள திருட்டுக்கு கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய முறையீடு
கனிம வள திருட்டுக்கு கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய முறையீடு
ADDED : ஜூலை 01, 2025 01:37 AM
ஈரோடு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மற்றும் நிர்வாகிகள், ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னிமலை மாமாங்க குளத்துக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து, அ.தி.மு.க., ஒன்றிய செயலர் கோபாலகிருஷ்ணனின் மனைவி பானு கோபால் பெயரிலான கல் குவாரி செயல்படுகிறது. மாமாங்க குளத்துக்கு செல்லும் அரசு வண்டிப்பாதை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, 8,039 கனமீட்டர் அளவு கனிமங்களை வெட்டி எடுத்துள்ளனர்.
இதை ஆர்.டி.ஓ., ஆய்வு செய்து, 44.18 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். இதை வைத்து அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.டி.ஓ., ஆய்வு செய்தாலும், வருவாய் துறை, கனிம வளத்துறை உட்பட நிபுணர்கள் ஆய்வு செய்து முழு அளவிலான சட்ட விரோத செயல்பாடுகளை செய்து, உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.