Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பவளமலை முருகன் கோவிலில் ஜூலை 7ல், பாலாலயம் விழா

பவளமலை முருகன் கோவிலில் ஜூலை 7ல், பாலாலயம் விழா

பவளமலை முருகன் கோவிலில் ஜூலை 7ல், பாலாலயம் விழா

பவளமலை முருகன் கோவிலில் ஜூலை 7ல், பாலாலயம் விழா

ADDED : ஜூன் 20, 2024 06:29 AM


Google News
கோபி : கோபி அருகே, பவளமலை முருகன் கோவிலில், ஆறாவது கும்பாபிேஷக விழா முன்னேற்பாடாக, பாலாலயம் விழா ஜூலை, 7ல், நடக்கவுள்ளது.ஈரோடு மாவட்டம், கோபி அருகே பிரசித்தி பெற்ற பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், கடந்த, 2004ல், ஐந்தாவது கும்பாபிேஷக விழா நடந்தது.

ஆறாவது கும்பாபி ேஷக விழா முன்னேற்பாடாக கடந்த, 2023 ஆக.,21ல், 6.90 லட்சம் ரூபாய் செலவில் பாலாலயம் நடந்தது. மூலவர் விமானம் அத்திமரக்கட்டையிலும், கைலாசநாதர், வள்ளி, தெய்வானை, இடும்பன், ராஜகோபுரம், விநாயகர் ஆகிய கோவில் விமானங்களின் அருட்சக்தி, கண்ணாடியிலும், ஆகமவிதிப்படி ஆவாகனம் செய்து, பஞ்சவர்ணம் பூசும் பணி துவங்கி, தற்போது வரை, 90 சதவீதம் முடிந்துள்ளது.அதேபோல் மடப்பள்ளி, அறநிலையத்துறை அலுவலகம், வாகன அறை வரை கான்கிரீட் கட்டமைப்பு, அன்னதான கூடத்துக்கு டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணி, 9.60 லட்சம் ரூபாயில், கடந்த மார்ச் மாதம் துவங்கி, தற்போது வரை தீவிரமாக நடக்கிறது. இப்பணிகள் அனைத்தும் முடிந்து, மூலவர் உட்பட 34 சுவாமி சிலைகளை அகற்றாமல் அதன் அருட்சக்தியை, ஆவாகனம் செய்யும் பாலாலாயம் விழா வரும் ஜூலை 7ல், நடக்கிறது. அதன்பின் கோவில் அறைகள் அனைத்தும் மராமத்து பணிகள் முடித்து, ஆகஸ்ட் மாதத்தில் கும்பாபிேஷக விழாவை நடத்த, அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு நடந்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us