/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம்: கொடுமுடி பகுதியில் கலெக்டர் ஆய்வு'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம்: கொடுமுடி பகுதியில் கலெக்டர் ஆய்வு
'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம்: கொடுமுடி பகுதியில் கலெக்டர் ஆய்வு
'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம்: கொடுமுடி பகுதியில் கலெக்டர் ஆய்வு
'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம்: கொடுமுடி பகுதியில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூன் 20, 2024 06:29 AM
ஈரோடு : அரசின் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யும்படி, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் அறிவித்தார்.இதன்படி ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நேற்று கொடுமுடி யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு செய்தார்.
மாதம் ஒரு முறை, ஒரு கிராமத்தில் தங்குவதுடன், அப்பகுதியில் உள்ள அரசு திட்டப்பணிகளை ஆய்வு செய்து, குறைகள் கேட்கப்படும். இதன்படி, கொடுமுடி யூனியன் பகுதி இ-சேவை மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரேஷன் கடைகள் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள், மக்களுக்கான சேவை அலுவலகங்களில் ஆய்வு செய்து, அங்கிருந்த மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.ஈரோடு - கரூர் சாலையில், 2.7 கி.மீ., துாரத்துக்கு, 20 கோடி ரூபாயில் சாலைப்புதுார் முதல் நொய்யல் வரை, 2 வழிச்சாலை, 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியை ஆய்வு செய்து விரைவுபடுத்த உத்தரவிட்டார்.பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, உதவி கோட்ட பொறியாளர் கதிரேசன், செயற்பொறியாளர் திருமூர்த்தி, உதவி பொறியாளர் உதயகுமார், கொடுமுடி தாசில்தார் பாலகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.