/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/உரிய பதிலளிக்காமல் அதிகாரிகள் நிபந்தனை; சடங்காக மாறுதோ விவசாயிகள் குறைதீர் கூட்டம்?உரிய பதிலளிக்காமல் அதிகாரிகள் நிபந்தனை; சடங்காக மாறுதோ விவசாயிகள் குறைதீர் கூட்டம்?
உரிய பதிலளிக்காமல் அதிகாரிகள் நிபந்தனை; சடங்காக மாறுதோ விவசாயிகள் குறைதீர் கூட்டம்?
உரிய பதிலளிக்காமல் அதிகாரிகள் நிபந்தனை; சடங்காக மாறுதோ விவசாயிகள் குறைதீர் கூட்டம்?
உரிய பதிலளிக்காமல் அதிகாரிகள் நிபந்தனை; சடங்காக மாறுதோ விவசாயிகள் குறைதீர் கூட்டம்?
ADDED : ஜூலை 27, 2024 01:12 AM
ஈரோடு: ஈரோட்டில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் வேளாண் குறைதீர் கூட்டம் நடந்தது.
இதில் நடந்த விவாதம் வருமாறு:கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சாந்தாமணி: விவசாயிகளின் கோரிக்கையை மனுவாக வழங்குங்கள். மனு கொடுத்துவிட்டால், அதுபற்றி பேச வேண்டாம். ஒவ்வொரு-வரும், 4 நிமிடத்துக்கு மேல் பேச வேண்டாம். அதிகாரிகள் பேசும்போது குறுக்கிடாதீர்கள்.மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன்: மாதம் தோறும் ஆர்.டி.ஓ., அலுவலகம், வனத்துறையிலும் குறைதீர் கூட்டம் நடப்பதால், அங்கே மனுக்களை வழங்குங்கள். மாவட்ட கூட்டத்தில் முக்கிய மனுக்களை வழங்கிவிட்டு, வேறு ஏதாவது இருந்தால் பேசுங்கள்.கீழ்பவானி விவசாயிகள் சங்கம் நல்லசாமி: பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து உயர்ந்து, 86 அடிக்கு மேல் தண்ணீர் உள்-ளது. பருவமழை துவங்கும்போது, அதிக நீர் வரத்தாகி, பவானி ஆற்றில் திறந்து, கடலில் வீணாவதைவிட, கீழ்பவானி முதல் பாக பாசனத்துக்கு ஆக., 15க்கு முன் தண்ணீர் திறந்துவிடுங்கள். அதுபற்றி முன்னதாக அறிவியுங்கள்.மேட்டூர் வலது கரை பாசன சபை பழனிசாமி: மேட்டூர் வலது-கரை பாசன பகுதிக்கும் தண்ணீர் திறக்க வேண்டும். வர்ணபுரம் வாய்க்கால் அருகே நெடுஞ்சாலை துறையினர், கிளை, கொப்பு வாய்க்கால்களை சேதப்படுத்தியதை சீரமைக்க வேண்டும்.தமிழக விவசாயிகள் சங்கம் பெரியசாமி: கீழ்பவானியில், 88 இடங்களில் பணி நடக்கிறது. தரமாக பணியை முடியுங்கள். ஒரு வாரம் தள்ளிப்போனாலும், பணி முடிந்த பின் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கலாம்.மலைவாழ் மக்கள் நலச்சங்கம் வி.பி.குணசேகரன்: பர்கூர், அந்-தியூர் உட்பட பல பகுதிகளிலும் மலை, குன்றுகளை அழித்து சாலை அமைக்கின்றனர். இத னால், விலங்குகள் வீடுகளுக்கு வருகிறது. பர்கூர், தேவர்மலை சாலையில் நிலச்சரிவுக்கு வாய்ப்-புள்ளது. மாதம் தோறும் வனத்துறை, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முனுசாமி: ஆப்பக்கூடல் அருகே கரி உற்பத்தி ஆலையால் மாசுபாடு ஏற்படுகிறது. கவுந்தப்-பாடி வேலம்பாளையத்தில் கோழி பண்ணையாலும், கூரப்பாளை-யத்தில் ஆயில் மில்லாலும் மாசுபாடு ஏற்படுவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் பேசும்போது, '4 நிமிடம் ஆகிவிட்டது' எனக்கூறி அதிகாரிகள் தடுத்ததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். 11:10 மணிக்கு துவங்கிய கூட்டம், 12:40 மணிக்கு முடிந்தது. விவசாயிகளை பேச விடாமலும், விவசாயிகளின் கோரிக்கை, குற்றச்சாட்டுக்கு அதிகாரிகள் முழுமையாக பதில் கூறாமலும் கூட்டத்தை பெயருக்கு நடத்தி முடித்தனர். கடந்த மாதமும் இதேபோன்ற நிலை ஏற்பட்டதால், நேற்றைய கூட்டத்-துக்கு பல சங்க நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.