ADDED : ஜூன் 22, 2024 01:11 AM
காங்கேயம்: வெள்ளகோவில் அருகேயுள்ள கே.வி.பழனிச்சாமி நகரை சேர்ந்தவர் மோகன் குமார், 35; டிரைவரான இவருக்கு ஒரு மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது.
மோகன் குமாருக்கு அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததால், மனைவியும் அவரது தாயாரும், அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இதனால் வீட்டில் தனியாக இருந்தவர், குடிப்பழக்கத்தை மறக்க முடியாத விரக்தியில், வீட்டில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.