ADDED : ஜூன் 22, 2024 01:11 AM
நம்பியூர்: நம்பியூர் தாசில்தால் அலுவலகத்தில், எலத்துார் உள் வட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி முகாம் நேற்று நடந்தது.
மாவட்ட குடிமை பொருள் வழங்கல் அதிகாரி ராம்குமார் தலைமை வகித்து மனுக்களை பெற்றார். புது ரேஷன் கார்டு, பட்டா மாறுதல், நில அளவை, இறப்பு சான்று, வாரிசு சான்று, முதியோர் ஓய்வூதியம் என, நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மனு கொடுத்தனர்.