/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ செக்போஸ்டில் வசமாக சிக்கிய மொபைல்போன் களவாணிகள் செக்போஸ்டில் வசமாக சிக்கிய மொபைல்போன் களவாணிகள்
செக்போஸ்டில் வசமாக சிக்கிய மொபைல்போன் களவாணிகள்
செக்போஸ்டில் வசமாக சிக்கிய மொபைல்போன் களவாணிகள்
செக்போஸ்டில் வசமாக சிக்கிய மொபைல்போன் களவாணிகள்
ADDED : ஜூன் 08, 2025 12:53 AM
பு.புளியம்பட்டி, கோவை மாவட்டத்தில் மொபைல் போன்களை குறிவைத்து களவாடிய இருவரை, செக்போஸ்டில் போலீசார் கைது செய்தனர்.
பவானிசாகர் அருகே பெரியகள்ளிப்பட்டி சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பாச்சி பைக்கில் வந்த மூவரை தடுத்து நிறுத்தினர். இதில் ஒருவர் தப்பி விட்ட நிலையில் இருவரை மடக்கி பிடித்தனர்.
அவர்கள் வைத்திருந்த பையில், 18 ஸ்மார்ட் மொபைல் போன், 2 மொபைல் சார்ஜர், ஒரு பவர் பேங்க் இருந்தது. விசாரணையில் பவானிசாகரை அடுத்த சுஜில்குட்டை சூரியகுமார், 21, முத்து, 19. என்பது தெரிந்தது. கோவை மாவட்டம் சிறுமுகை மற்றும் அன்னூர் பகுதிகளில், மொபைல்போன்களை திருடியதும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் திருடப்பட்ட மொபைல்களை பொருட்களை பறிமுதல் செய்தனர். தப்பிய சுஜில்குட்டையை சேர்ந்த திவின்குமார், 19, என்பவரை தேடி வருகின்றனர்.