Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் முருகன்

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் முருகன்

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் முருகன்

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் முருகன்

ADDED : ஜூலை 21, 2024 09:18 AM


Google News
பு.புளியம்பட்டி : நீலகிரி நாடாளுமன்ற தேர்தலில், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மத்-திய இணை அமைச்சர் எல்.முருகன், ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டிக்கு நேற்று முன்தினம் வந்தார். மாவட்ட தலைவர் கலை-வாணி தலைமையிலான நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

புன்செய் புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன், மக்கள் மத்தியில் நன்றி தெரிவித்து அவர் பேசு-கையில், ''மூன்றாவது முறையாக பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி நான்கு கோடி பேருக்கு வீடு கட்டும் திட்டத்தை முதல் கையெழுத்து போட்டு துவக்கி வைத்தார். தி.மு.க., அரசு மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் பேரிடி-யாக இறங்கி உள்ளது.

ஆனால், மின் கட்டணமே செலுத்தாத வகையில் சோலார் மின்சார பயன்பாட்டை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது,'' என்றார். அமைச்ச-ருடன் நகர தலைவர் தங்கமணி, மாவட்ட பொது செயலாளர் சரவணகுமார், ஒன்றிய தலைவர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us