ADDED : ஜூலை 21, 2024 09:18 AM
பெருந்துறை,: பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தி-யாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், கொப்-பரை ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 3,292 மூட்டைகளில், 1.53 லட்சம் கிலோ கொப்பரை வரத்தானது. முதல் தரம் கிலோ, 86.60 ரூபாய் முதல், 96.10 ரூபாய் வரை விற்றது. இரண்டாம் தரம் கிலோ, 34.79 ரூபாய் முதல் 90.60 ரூபாய் வரை, 1.37 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த கொப்பரை ஏலத்-துக்கு, 2,056 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. ஒரு கிலோ, 61.20 ரூபாய் முதல், 92.30 ரூபாய் வரை விலை போனது.