காட்டன் மில்லில் பயங்கர தீ விபத்து
காட்டன் மில்லில் பயங்கர தீ விபத்து
காட்டன் மில்லில் பயங்கர தீ விபத்து
ADDED : ஜூன் 06, 2025 01:03 AM
திருப்பூர், திருப்பூர், மங்கலம் பூமலுார் அருகே வேஸ்ட் துணி அரைக்கும் குடோன் உள்ளது. கரைப்புதுார், வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த ரமேஷ், 60 என்பவர் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். அங்கு, திருப்பூர், அணைப்பாளையம், சாமுண்டி நகரைச் சேர்ந்த சந்தோஷ், காட்டன் மில் நடத்தி வருகிறார்.
குடோனில் ஆறு வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நேற்று மாலை, குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தீ 'மளமள' வென பரவிய நிலையில் பல்லடம் தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்தனர். 'பஞ்சு அரைக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட தீயில், பல லட்சம் மதிப்புள்ள வேஸ்ட் துணிகள் மற்றும் இயந்திரம் எரிந்து நாசமானது' என, தீயணைப்புத்துறையினர் கூறினர்.