/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/எம்.எல்.ஏ., மகள் இறப்பு துக்கம் விசாரித்த இ.பி.எஸ்.,எம்.எல்.ஏ., மகள் இறப்பு துக்கம் விசாரித்த இ.பி.எஸ்.,
எம்.எல்.ஏ., மகள் இறப்பு துக்கம் விசாரித்த இ.பி.எஸ்.,
எம்.எல்.ஏ., மகள் இறப்பு துக்கம் விசாரித்த இ.பி.எஸ்.,
எம்.எல்.ஏ., மகள் இறப்பு துக்கம் விசாரித்த இ.பி.எஸ்.,
ADDED : ஜூன் 06, 2025 01:03 AM
ஈரோடு, மொடக்குறிச்சி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி மகள் கருணாம்பிகா. இவரது கணவர் ஆற்றல் அசோக்குமார், கடந்த லோக்சபா தேர்தலில் ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டார். கோவையில் வசித்து வந்த கருணாம்பிகா உடல் நலக்குறைவால் கடந்த, 4ல் இறந்தார்.
ஈரோடு - கரூர் சாலை சோளங்கபாளையத்தில் உள்ள ஆற்றல் அசோக்குமாரின் வீட்டுக்கு உடலை நேற்று எடுத்து வந்து இறுதிச்சடங்கு செய்தனர். சோளங்காபாளையத்துக்கு எதிர் கட்சி தலைவர் இ.பி.எஸ்., நேற்று வந்தார். ஆற்றல் அசோக்குமார், எம்.எல்.ஏ., சரஸ்வதி, ஆற்றல் அசோக்குமாரின் தாயாரான முன்னாள் எம்.பி., சவுந்தரம் ஆகியோரிடம் துக்கம் விசாரித்தார்.
இதேபோல் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜ.,வினரும், கருணாம்பிகா உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.