Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆதி கருவண்ணராயர் கோவிலில் மாசி விழா; தீவிர சோதனைக்கு பின் வாகனங்கள் அனுமதி

ஆதி கருவண்ணராயர் கோவிலில் மாசி விழா; தீவிர சோதனைக்கு பின் வாகனங்கள் அனுமதி

ஆதி கருவண்ணராயர் கோவிலில் மாசி விழா; தீவிர சோதனைக்கு பின் வாகனங்கள் அனுமதி

ஆதி கருவண்ணராயர் கோவிலில் மாசி விழா; தீவிர சோதனைக்கு பின் வாகனங்கள் அனுமதி

ADDED : மார் 12, 2025 08:05 AM


Google News
பவானிசாகர்: பவானிசாகர் வனச்சரகம் தெங்குமரஹாடா வனப்பகுதியில் உள்ள, ஆதி கருவண்ணராயர் மற்றும் பொம்மதேவி கோவில்களில், மாசி மகம் திருவிழா மூன்று நாள் நடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

அடர்ந்த வனப்பகுதியில் கோவில் உள்ளதால், பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. நடப்பாண்டு விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை முதலே கோவிலுக்கு வாகனங்களில் பக்தர்கள் வரத் தொடங்கினர். பவானிசாகர் அருகே காராச்சிக்கொரை சோதனைச்சாவடியில் வனத்துறையினர் சோதனை செய்து அனுமதிச் சீட்டு வழங்கி அனுமதித்தனர். நுாறு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு வந்த பக்தர்கள், அரசு சார்பில் இலவசமாக இயக்கப்பட்ட பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us