/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ திருமணமான மகள்கள்மாயம்; தாய்கள் புகார் திருமணமான மகள்கள்மாயம்; தாய்கள் புகார்
திருமணமான மகள்கள்மாயம்; தாய்கள் புகார்
திருமணமான மகள்கள்மாயம்; தாய்கள் புகார்
திருமணமான மகள்கள்மாயம்; தாய்கள் புகார்
ADDED : செப் 24, 2025 01:18 AM
கோபி :கோபி அருகே நஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் நிர்மலா தேவி, 23; இவரின் கணவர் ராமச்சந்திரன், 30; சில நாட்களுக்கு முன் கோபி அருகே சாணார்புதுாரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
கடந்த, 13ம் தேதி கடைக்கு செல்வதாக சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரின் தாய் அய்யம்மாள் புகாரின்படி கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
* ஈரோடு மூலப்பட்டறை பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரம் மனைவி அன்னபூரணி, 32; கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து இரண்டு மகள்களுடன் தாய் மணிமலர் வீட்டில் வசிக்கிறார்.தொழில் நிமித்தமாக பல இடங்களில் அன்னபூரணி கடன் வாங்கி இருந்தார். கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் கடந்த, 20ம் தேதி மாயமாகி விட்டார். தாய் மணிமலர் புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.