கடையில் பெண்ணிடம் நகை பறித்தவர் கைது
கடையில் பெண்ணிடம் நகை பறித்தவர் கைது
கடையில் பெண்ணிடம் நகை பறித்தவர் கைது
ADDED : செப் 17, 2025 01:38 AM
ஈரோடு, கொடுமுடியை அடுத்த நொய்யல் ஆவுடையார் பாறை முருகன் நகரை சேர்ந்தவர் ருக்மணி, 60; முருகன் நகரில் பெட்டிக்கடை வைத்துள்ளார். கடந்த, 9ம் தேதி மாலை கடைக்கு பொருள் வாங்க வந்த வாலிபர், ருக்மணியிடம் பேசியபடியே திடீரென கழுத்தில் போட்டிருந்த இரண்டு பவுன் தங்கச்சங்கிலியை பறித்து தப்பினார்.
கொடுமுடி போலீசார் விசாரித்தனர். இதில் கரூர் ஜவகர் பஜார் சூர்யா, 22, என தெரிந்தது. சூர்யாவை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.