ADDED : செப் 17, 2025 01:37 AM
கோபி, கோபி அருகே பாலப்பாளையத்தை சேர்ந்த யோகேஸ்வரன் மகள் சவுமியா, 19; தனியார் கல்லுாரி இரண்டாமாண்டு மாணவி. கடந்த, 5ம் தேதி மதியம் மாயமானார்.
அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரின் தாய் பாரதி கொடுத்த புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் தேடி வருகின்றனர்.