ADDED : ஜூலை 27, 2024 01:12 AM
ஈரோடு: பெருந்துறை, வரப்பாளையம் அருகே எம்.சாணார்பாளை-யத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, 39, கூலி தொழிலாளி.
கடந்த, 2023 ல் சாராயம் காய்ச்சியபோது மதுவிலக்கு தடுப்பு போலீசார் கைது செய்தனர். இதன் பிறகு இருமுறை சாராயம் காய்ச்சிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து சாராயம் காய்ச்சி வருவதால், இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க ஈரோடு எஸ்.பி., ஜவகர் பரிந்துரைப்படி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தர-விட்டார். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாரி-முத்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.