/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கல்லுாரிகளின் கடைசி 5 ஆண்டு 'கட்-ஆப்' பார்க்க வேண்டும்: காலைக்கதிர் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் யோசனைகல்லுாரிகளின் கடைசி 5 ஆண்டு 'கட்-ஆப்' பார்க்க வேண்டும்: காலைக்கதிர் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் யோசனை
கல்லுாரிகளின் கடைசி 5 ஆண்டு 'கட்-ஆப்' பார்க்க வேண்டும்: காலைக்கதிர் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் யோசனை
கல்லுாரிகளின் கடைசி 5 ஆண்டு 'கட்-ஆப்' பார்க்க வேண்டும்: காலைக்கதிர் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் யோசனை
கல்லுாரிகளின் கடைசி 5 ஆண்டு 'கட்-ஆப்' பார்க்க வேண்டும்: காலைக்கதிர் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் யோசனை
ADDED : ஜூலை 21, 2024 11:00 AM
ஈரோடு: இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேரும் மாணவர்கள், அந்த கல்லுாரிகளின் கடைசி, 5 ஆண்டுகளின் கட்-ஆப் பார்க்க வேண்டும் என்று, காலைக்கதிர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில், மாணவர் களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
காலைக்கதிர் சார்பில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, ஈரோட்டில் நேற்று நடந்தது. காலைக்கதிர் நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நிகழ்ச்சியை நடத்தின. இதில் கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசியதாவது: எந்த கல்லுாரி என்பதை மாணவர்கள் தெளிவாக தேர்வு செய்ய வேண்டும். கல்லுாரிகளின் தேர்ச்சி சதவீதம் எவ்வளவு. சுயநிதி கல்லுாரியா? இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
சுயநிதி கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் திறன் மீது நிறுவனங்களுக்கு ஒரு சந்தேகம் உண்டு. தமிழகத்தில், 40 முதல் 50 சுயநிதி கல்லுாரிகள் மட்டுமே சிறந்தவை. சுயநிதி இல்லாத சிறந்த கல்லுாரிகள் குறித்து tnea வெப்சைட்டில் தெரிந்து கொள்ளலாம். சுயநிதி கல்லுாரிகளை நேரில் சென்று துாய்மை, ஆய்வக வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.
படிக்கும் போதே வேலை வாய்ப்பு (பிளேஸ்மெண்ட்) அளிக்க கூடிய கல்லுாரிகள்தான் சிறந்தவை. தொழில் சார்ந்த திறன் இல்லாவிட்டால் வேலை கிடைக்காது. தகவல் தொழில் நுட்ப துறையில் அதிக சம்பளம் கிடைக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையிலும் அதிக வேலை வாய்ப்பு, சம்பளம் கிடைக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில் நுட்பம், சைபர் செக்யூரிட்டி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் வரும் நாட்களில் அதிக வேலை வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜ் பேசியதாவது: கல்லுாரிகளின் கடைசி, 5 ஆண்டுகளின் 'கட்-ஆப்' பார்க்க வேண்டும். கல்லுாரி, துறை தேர்வு செய்வது மிக முக்கியம். யூசர் ஐ.டி., பாஸ்வேர்டை யாருக்கும் வழங்க கூடாது. ஒரே மாவட்டத்துக்குள் படிக்க வேண்டும் என்றாலும் அதற்கான வாய்ப்பு உள்ளது.
கவுன்சிலிங் விண்ணப்பத்தை நன்கு படித்து பூர்த்தி செய்ய வேண்டும். கல்லுாரி மற்றும் பாட பிரிவுகள் தேர்வு செய்ய உரிய அவகாசம் வழங்கப்படும். பொது, தனி பிரிவுகள், முன்னாள் ராணுவத்தினர், அரசு ஒதுக்கீடு, விளையாட்டு வீரர் என தனித்தனியே ஒதுக்கீடு உள்ளது. அவற்றை புரிந்து பூர்த்தி செய்ய வேண்டும். கவுன்சிலிங் விண்ணப்பம் பூர்த்தி செய்வதில் சந்தேகம் இருப்பின் tneacare@gmail.com என்ற முகவரியில், 044-22351014, 044-22351015 என்ற எண்ணிலோ அல்லது கோபி கலை அறிவியல் கல்லுாரி, பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, சித்தோடு ஐ.ஆர்.டி.டி., சத்தி அரசு கல்லுாரியில் உள்ள மையங்களில் விளக்கம் பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.
கோவை கற்பகம் இன்ஸ்டியூசன்ஸ் பி.ஆர்.ஓ., ஆதிபாண்டியன் பேசியதாவது: கல்லுாரியை தேர்வு செய்யும் போது சரியாக தேர்வு செய்ய வேண்டும். அனைவருக்கும் கட்-ஆப் மார்க் வந்திருக்கும். ரேங்க் பட்டியல் கிடைத்திருக்கும். ஒரு நம்பர் மாறினாலும் கல்லுாரி மாறி விடும். யு.பி.எஸ்.சி., நடப்பாண்டு தேர்வு முடிவில் பி.இ., படித்தவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். திறன் வளர்த்தல் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அதிகம் இருப்பதை காட்டுகிறது. இளநிலை படிப்புடன் வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் கல்லுாரியாக இருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரி துறை தலைவர் கணபதி பேசியதாவது: சரியான கல்லுாரியை தேர்வு செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டும் என மாணவர்கள் அதிகம் எண்ணுகின்றனர். 4 ஆண்டு படிப்பில் துறை சார்ந்த கூடுதலாக படிப்புகளை படிக்க வேண்டும். கல்லுாரி உள் கட்டமைப்பு வசதி, வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம், ஆய்வக வசதிகளை ஆராய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி சேர்மன் ஸ்ரீராம் பேசியதாவது: ஆண்டுதோறும், 100 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்கிறோம். பாதுகாப்பான கல்வி, ஒழுக்கம், வேலைவாய்ப்பு எங்கு கிடைக்கிறதோ அங்கு சென்று படிக்க வேண்டும். 2 ஆண்டுகள் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வேலை கிடைக்காத சூழல் இருந்தது.
சர்வதேச அளவில், 1,720 தொழில் நிறுவனங்கள் இந்தியாவுக்கு வாரம் ஒன்றாக வந்து கொண்டிருக்கிறது. இதில் தமிழகத்தில் மட்டுமே, 220 பெரிய தொழில் நிறுவனங்கள் வந்துள்ளன. இந்தியர்களின் தொழில்நுட்ப அறிவு திறன் வளர்ச்சியே இதற்கு காரணம். முதலில் மாணவர்கள் இலக்கை நிர்ணயிக்க வேண்டும். வேலைக்கான எண்ணத்தை வளர்த்து அதில் உறுதியாக இருக்க வேண்டும். திறமையான மாணவர்களைதான் பெரிய நிறுவனங்கள் வேலைக்கு சேர்க்கின்றன.
கம்ப்யூட்டர் சயின்ஸ் மட்டுமல்ல. கோர் இன்ஜினியரிங் துறையிலும் அதிக சம்பளம் கிடைக்கிறது. தொழில் நுட்ப அறிவுடைய மாணவர்களை பெரிய நிறுவனங்கள் வேலைக்கு சேர்க்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியை கோவை கற்பகம் கல்வி குழுமம், ஸ்ரீஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரி, ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரிகள் இணைந்து வழங்கின. இதேபோல் நேற்று நாமக்கல்லிலும், இன்ஜனியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, பரமத்தி சாலையில் உள்ள எஸ்.பி.எஸ்., திருமண மண்டபத்தில் நடந்தது.