/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தல்' 'புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தல்'
'புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தல்'
'புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தல்'
'புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தல்'
ADDED : ஜூலை 21, 2024 09:22 AM
கோபி, : இந்திய கம்யூ., கட்சி, மாநில நிர்வாக குழு கூட்டம் மற்றும் மாநில குழுக் கூட்டம், கோபியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கட்சி தேசிய பொதுச் செயலாளர் ராஜா கூறிய-தாவது: லோக்சபா தேர்தலில், மக்கள் அளித்த தீர்ப்பு, பா.ஜ., கட்சிக்கு எதிரான தீர்ப்பாக உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம், இன்று மிக மோச-மான நிலையில் உள்ளது. இந்திய நாடு அந்நிய நாட்டுக்கு, கடன்பட்ட நாடாக இன்று மாறி இருக்-கிறது.
இந்த சூழலில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்-படும் பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். 'நீட்' தேர்வு இன்று பெரும் பிரச்னையாக உள்ளது. கல்வி மாநில அரசின் பட்டியலுக்கு வரவேண்டும். மூன்று புதிய குற்ற-வியல் சட்டங்களை அமல்படுத்தியது கண்டனத்-துக்குரியது. அவ்றை திரும்ப பெற வேண்டும். நுாறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு, மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்க மறுக்கிறது. பொருளாதார கொள்கையே, இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்துக்கு காரணமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.