Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/லஞ்சம் கேட்டு 8 மாதமாக அலைக்கழித்த நில அளவையர்; போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர்

லஞ்சம் கேட்டு 8 மாதமாக அலைக்கழித்த நில அளவையர்; போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர்

லஞ்சம் கேட்டு 8 மாதமாக அலைக்கழித்த நில அளவையர்; போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர்

லஞ்சம் கேட்டு 8 மாதமாக அலைக்கழித்த நில அளவையர்; போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர்

UPDATED : ஜூன் 26, 2024 03:04 PMADDED : ஜூன் 26, 2024 03:01 PM


Google News
Latest Tamil News
குளித்தலை: குளித்தலையில் வீட்டினை நில அளவீடு செய்வதற்காக முறையாக பணம் செலுத்தியும் கடந்த எட்டு மாதங்களாக நிலத்தினை அளக்காமல் இழுத்தடிப்பு செய்து லஞ்சம் கேட்ட நில அளவையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதியவர் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூர் ஊராட்சி மேல சுக்காம்பட்டியை சேர்ந்தவர் விவசாயக் கூலித் தொழிலாளி முதியவர் அர்ஜுனன் (70). இவர் நத்தம் கூட்டு பட்டாவில் உள்ள தனது வீட்டின் இடத்தினை உட்பிரிவு செய்து, தனக்குரிய வீட்டுமனை அளந்து தனிப்பட்டா வழங்குமாறு கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆன்லைன் மூலம் பணம் கட்டியுள்ளார்.

இது குறித்து மனுவும் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவையர் அலுவலகத்திலும் தந்துள்ளார். ஆனால் நில அளவையரான பார்த்திபன் நிலத்தினை அளவீடு செய்வதற்கு லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆன்லைன் மூலம் உரிய பணம் கட்டியும் பல மாதங்களாக தனது வீட்டினை அளந்துக்காட்டாமல் நில அளவியல் கேட்ட லஞ்சப்பணம் கொடுக்க முன்வராததால் வேண்டுமென்றே என்னை அலைக்கழித்து வந்த நில அளவையர் பார்த்திபன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று ஜமாபந்தி கடைசி நாளில் முதியவர் அர்ஜுனன், பார்த்திபனை கண்டித்து கழுத்தில் பதாகையை அணிந்தவாறு வட்டாட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அர்ஜுனனிடம் குளித்தலை வட்டாட்சியர் சுரேஷ் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அர்ஜூனன் கூறுகையில், 'நான் முன்கூட்டியே புகார் அளித்தும் அமைதிப் பேச்சுவார்த்தையில் நிலத்தினை அளவீடு செய்வதாக கூறினார்கள். ஆனால் அமைதி பேச்சுவார்த்தை நடந்து பல மாதமாகியும் நில அளவையர் பார்த்திபன் இடத்தினை அளவீடு செய்யவில்லை. என்னைப்போல் பலரிடம் புரோக்கர் மூலம் லஞ்சம் கேட்டு இழுத்தடிப்பு செய்து வருகிறார். நில அளவையர் போல் லஞ்சம் கேட்டு செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என அவர் கூறினார்.

தங்களது இடத்தினை நாளைக்குள் நில அளவையர் பார்த்திபன் அளந்து தருவார் என உறுதி அளித்ததை தொடர்ந்து முதியவர் போராட்டத்தை கைவிட்டார். நிலத்தினை அளவீடு செய்ய நில அளவையர் லஞ்சம் கேட்டதாக முதியவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் வட்டாச்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us