/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பிருந்தா வீதியில் வாகன நெரிசலுக்கு விருந்தா? மாநகராட்சிக்கு வாகன ஓட்டிகள் கேள்வி பிருந்தா வீதியில் வாகன நெரிசலுக்கு விருந்தா? மாநகராட்சிக்கு வாகன ஓட்டிகள் கேள்வி
பிருந்தா வீதியில் வாகன நெரிசலுக்கு விருந்தா? மாநகராட்சிக்கு வாகன ஓட்டிகள் கேள்வி
பிருந்தா வீதியில் வாகன நெரிசலுக்கு விருந்தா? மாநகராட்சிக்கு வாகன ஓட்டிகள் கேள்வி
பிருந்தா வீதியில் வாகன நெரிசலுக்கு விருந்தா? மாநகராட்சிக்கு வாகன ஓட்டிகள் கேள்வி
ADDED : செப் 21, 2025 01:04 AM
ஈரோடு :ஈரோடு மாநகராட்சி, 36வது வார்டு பிருந்தா வீதியில் மொத்தம், சில்லறை ஜவுளி விற்பனை கடைகள் அதிக எண்ணிக்கையில் செயல்படுகின்றன. ஒரு மாதத்துக்கு முன் பிருந்தா வீதியில் இருந்து ஈஸ்வரன் கோவில் வீதிக்கு திரும்பும் கார்னரில், சாக்கடை கால்வாய் மீது சிறு பாலம் அமைக்கும் பணி நடந்தது.
இதற்காக போரிகார்டு வைத்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பணி முடித்து பேரிகார்டுகளையும் அகற்றி போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனால் பணியின் போது தோண்டி எடுக்கப்பட்ட மண், கற்களை சாலை நடுவில் குவித்துள்ளனர்.இதனால் வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது. பிருந்தா வீதியில் வாகன நெரிசலுக்கு வைத்த விருந்து, எப்போது முடிவுக்கு வரும்? என்று, வாகன ஓட்டிகள் எரிச்சல் தெரிவித்துள்ளனர்.