/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிவகிரி தம்பதி கொலையாளிகளிடம் பணம், நகை பெற்றவர்கள் குறித்து விசாரணை; எஸ்.பி., தகவல் சிவகிரி தம்பதி கொலையாளிகளிடம் பணம், நகை பெற்றவர்கள் குறித்து விசாரணை; எஸ்.பி., தகவல்
சிவகிரி தம்பதி கொலையாளிகளிடம் பணம், நகை பெற்றவர்கள் குறித்து விசாரணை; எஸ்.பி., தகவல்
சிவகிரி தம்பதி கொலையாளிகளிடம் பணம், நகை பெற்றவர்கள் குறித்து விசாரணை; எஸ்.பி., தகவல்
சிவகிரி தம்பதி கொலையாளிகளிடம் பணம், நகை பெற்றவர்கள் குறித்து விசாரணை; எஸ்.பி., தகவல்
ADDED : ஜூன் 22, 2025 01:17 AM
ஈரோடு, சிவகிரி அருகே மேகரையான் தோட்டத்தை சேர்ந்த மூத்த தம்பதியர் ராமசாமி-பாக்கியம் கொலை வழக்கில், அரச்சலுாரை சேர்ந்த ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் மற்றும் திருட்டு நகையை உருக்கி கொடுத்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நால்வரிடமும் கொலை வழக்கு தொடர்பாக, போலீசார் கஸ்டடி எடுத்து, ஆறு நாட்கள் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து ஈரோடு எஸ்.பி., சுஜாதா கூறியதாவது: சிவகிரி தம்பதி கொலை வழக்கு கொலையாளிகள் கஸ்டடி விசாரணை மட்டும் நிறைவடைந்துள்ளது. கஸ்டடியில் அவர்கள் அளித்த தகவல் ரகசியம் காக்கப்படுகிறது.
அதேசமயம் தகவல் தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. கஸ்டடி மூலம் அவர்களிடம் இருந்து கூடுதல் நகை, பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். நால்வரின் வங்கி கணக்கு ஆவணங்கள் பெறப்பட்டு அவர்களது வரவு-செலவு ஆராயப்படுகிறது.
சிவகிரி தம்பதி கொலையை ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகிய மூவர் தான் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கொள்ளையடித்த நகை, பணம் பலருக்கு பரிமாற்றம் நடந்துள்ளது. அவர்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
பல்லடத்தில் நடந்த மூவர் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடப்பதால், அது தொடர்பாக நாங்கள் பேசக்கூடாது. கொலையாளிகளை அவர்கள் கஸ்டடி எடுத்தால், அதில் எங்களுக்கு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் கொலையாளிகளை கஸ்டடி எடுக்க திட்டமிடுவோம். இவ்வாறு எஸ்.பி., கூறினார்.