/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அமைச்சரை முற்றுகையிட்ட தி.மு.க.,வினரால் பரபரப்பு அமைச்சரை முற்றுகையிட்ட தி.மு.க.,வினரால் பரபரப்பு
அமைச்சரை முற்றுகையிட்ட தி.மு.க.,வினரால் பரபரப்பு
அமைச்சரை முற்றுகையிட்ட தி.மு.க.,வினரால் பரபரப்பு
அமைச்சரை முற்றுகையிட்ட தி.மு.க.,வினரால் பரபரப்பு
ADDED : ஜூன் 22, 2025 01:17 AM
தாராபுரம், தாராபுரத்தை அடுத்த பெரமியம் பகுதியில், 43.29 லட்சம் மதிப்பில் சாலை வளப்படுத்தும் பணி துவக்க நிகழ்வில் பங்கேற்க, அமைச்சர் கயல்விழி நேற்று வந்தார். நிகழ்ச்சி முடியும் வரை தொண்டர்கள் அமைதி காத்தனர்.
நிகழ்ச்சி முடிந்து காரில் கிளம்பியபோது, தாராபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க.., பல்வேறு பஞ்., மற்றும் கிளை நிர்வாகிகள், அமைச்சரின் காரை முற்றுகையிட்டனர். இதனால் காரில் இருந்து இறங்கிய அமைச்சரிடம், 'ஏற்கனவே இருந்த ஒன்றிய செயலாளர் செந்தில்குமாரே, பதவியில் இருக்கட்டும். புதிய ஒன்றிய செயலாளர் துரைசாமி நியமனத்தை திரும்ப பெற வேண்டும்' என்று கூறினர். அவர்களை சமாதானம் செய்த அமைச்சர் கயல்விழி, அவரது கணவர் செல்வராஜ், தலைமைக்கு தெரியப்படுத்துவதாக உறுதியளிக்கவே, புதிய நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நுாற்றுக்கும் மேற்பட்ட கிளை நிர்வாகிகள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.