/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மனைவி உயிரை பறித்த கணவரின் குடிப்பழக்கம் மனைவி உயிரை பறித்த கணவரின் குடிப்பழக்கம்
மனைவி உயிரை பறித்த கணவரின் குடிப்பழக்கம்
மனைவி உயிரை பறித்த கணவரின் குடிப்பழக்கம்
மனைவி உயிரை பறித்த கணவரின் குடிப்பழக்கம்
ADDED : ஜூன் 01, 2025 01:21 AM
சென்னிமலை சென்னிமலையில் கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த மனைவி, தற்கொலை செய்து கொண்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னிமலையை அடுத்த மேலப்பாளையம், சர்க்கார் கிணறு வீதியை சேர்ந்த கணேஷின் இளைய மகள் ஜமுனாதேவி, 30; சென்னிமலை, கிழக்கு புது வீதியை சேர்ந்த பழனிசாமி மகன் லோகநாதன். இருவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு இரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. சென்னிமலை, மாணிக்கவாசகர் தெருவில், கணவருடன் ஜமுனாதேவி வசித்து வந்தார். லோகநாதன் மாலதி டெக்ஸ் பெயரில் தறிப்பட்டறை நடத்தி வருகிறார். லோகநாதன் அதிக அளவில் மது குடித்து வந்துள்ளார். இதனால் ஜமுனாதேவி மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் வீட்டில் நேற்று முன்தினம் இரவு, மின்விசிறியில் துப்பட்டாவால் துாக்கிட்டு கொண்டார்.
கதவை உடைத்து சென்னிமலை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. ஜமுனாதேவி தாயார் தனலட்சுமி புகாரின்படி, சென்னிமலை போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ.,விசாரணையும் நடக்கிறது.