/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விபத்தில் சிக்கிய பஸ் 15 பயணிகள் காயம் விபத்தில் சிக்கிய பஸ் 15 பயணிகள் காயம்
விபத்தில் சிக்கிய பஸ் 15 பயணிகள் காயம்
விபத்தில் சிக்கிய பஸ் 15 பயணிகள் காயம்
விபத்தில் சிக்கிய பஸ் 15 பயணிகள் காயம்
ADDED : ஜூன் 01, 2025 01:21 AM
பெருந்துறை, கேரளாவின் பத்தனம்திட்டாவில் இருந்து ஒரு ஆம்னி பஸ் பெங்களூருக்கு, நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுது. திருச்சூரை சேர்ந்த சஜிவ்குமார், 51, ஓட்டினார்.
நேற்று அதிகாலை, 3:45 மணியளவில், பெருந்துறை, துடுப்பதி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்த முயன்றது. அந்த இடத்தில் மேம்பால பணி நடந்து கொண்டிருந்தது.
இதனால் அப்பகுதியில் வைத்திருந்த தடுப்புகளை இடித்து, மண் திட்டின் மீது நின்றது. விபத்தில் டிரைவர் உட்பட, 15 பயணிகள் காயம் அடைந்தனர். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.