/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நம்பியூர் பகுதியில் காற்றுடன் கனமழை 2,000 வாழை மரம் சேதம்; பல இடங்களில் மரங்கள் முறிவுநம்பியூர் பகுதியில் காற்றுடன் கனமழை 2,000 வாழை மரம் சேதம்; பல இடங்களில் மரங்கள் முறிவு
நம்பியூர் பகுதியில் காற்றுடன் கனமழை 2,000 வாழை மரம் சேதம்; பல இடங்களில் மரங்கள் முறிவு
நம்பியூர் பகுதியில் காற்றுடன் கனமழை 2,000 வாழை மரம் சேதம்; பல இடங்களில் மரங்கள் முறிவு
நம்பியூர் பகுதியில் காற்றுடன் கனமழை 2,000 வாழை மரம் சேதம்; பல இடங்களில் மரங்கள் முறிவு
ADDED : ஜூன் 04, 2024 04:49 AM
நம்பியூர்: நம்பியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வேமாண்டாம்பாளையத்தில், மூன்று ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த, ௨,௦௦௦ செவ்வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமானது.
பட்டிமணியக்காரன் பாளையம் பள்ளிக்கு செல்லும் சாலை அருகே பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. குளத்துப்பாளையம் குளம் பகுதியில் பழமையான மரங்கள் முறிந்து விழுந்தன. வேமாண்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பத்துக்கும் மேற்பட்ட ஒடிந்து விழுந்தன.
பழனிகவுண்டன் புதுார் குட்டை, குளத்துபாளையம் ஒவங்காட்டுக் குட்டை, மங்கரசு வளையபாளையம் பழனியம்மா காட்டுக்குட்டை பகுதியில் மண் கரை அடித்து செல்லப்பட்டது. செம்மம்பாளையம் ஊரடி குட்டையிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
குளத்துப்பாளையம் குளத்துக்கு தண்ணீர் வரும் பாதையில் தடுப்பணை உடைந்ததில், கருப்புசாமி என்பவரது தோட்டத்திற்குள் மழை நீர் புகுந்தது. கிணற்றில் பாதி அளவுக்கு மண் சரிந்துள்ளதால், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பட்டிமணியக்காரன் பாளையம்-புளியம்பட்டி சாலை வரப்பாளையத்தில், தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால், போக்குவரத்து பாதித்தது. நேற்றும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் குள கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க, நம்பியூர் பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.