/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஓட்டு எண்ணும் மைய வளாகத்தில் ஐ.டி., கார்டு இருந்தால் மட்டுமே அனுமதி ஓட்டு எண்ணும் மைய வளாகத்தில் ஐ.டி., கார்டு இருந்தால் மட்டுமே அனுமதி
ஓட்டு எண்ணும் மைய வளாகத்தில் ஐ.டி., கார்டு இருந்தால் மட்டுமே அனுமதி
ஓட்டு எண்ணும் மைய வளாகத்தில் ஐ.டி., கார்டு இருந்தால் மட்டுமே அனுமதி
ஓட்டு எண்ணும் மைய வளாகத்தில் ஐ.டி., கார்டு இருந்தால் மட்டுமே அனுமதி
ADDED : ஜூன் 04, 2024 04:48 AM
ஈரோடு: ஓட்டு எண்ணும் மைய வளாகத்தில், தேர்தல் ஆணைய அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
ஈரோடு அடுத்த சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில் இன்று காலை, 8:00 மணிக்கு ஈரோடு லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படுகிறது.
ஒட்டு எண்ணும் பணியில் நேரடியாக ஈடுபடும் அலுவலர்களுக்கு, கலெக்டர் அலுவலகம் மூலம், தேர்தல் ஆணைய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் ஓட்டு எண்ணும் பணியை கண்காணிக்க வருவதால், அவர்களுக்கும் உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தவிர, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், தீயணைப்பு துறையினர், மருத்துவ முகாமுக்கான டாக்டர் உள்ளிட்ட பணியாளர்கள், பி.ஆர்.ஓ., அலுவலக பணியாளர்கள், செய்தியாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில், வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் மட்டும் பொறியியல் கல்லுாரி முகப்பு வாயில் வழியாகவும், ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் உட்பட பிற பணியாளர்கள் அத்திடக்கடவு - அவினாசி திட்டப்பணி நடக்கும் பகுதி வாயில் வழியாகவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
கல்லுாரி வளாகத்துக்குள் உரிய பரிசோதனைக்கு பின்னரே அனைவரும் அனுமதிக்கப்படுவர். அடையாள அட்டையை மறந்து வைத்திருந்தாலோ, சந்தேகப்படும்படியாக இருந்தாலும், அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மையத்துக்குள் மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது. நுழைவு பகுதி வாகன நிறுத்தத்தில் அனைவரும் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, தேர்தல் ஆணையம் சார்பில் இயக்கப்படும் வாகனங்களில் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர்.