/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொடர் வன குற்றங்களில் ஈடுபட்டதால் 'குண்டாஸ்' தொடர் வன குற்றங்களில் ஈடுபட்டதால் 'குண்டாஸ்'
தொடர் வன குற்றங்களில் ஈடுபட்டதால் 'குண்டாஸ்'
தொடர் வன குற்றங்களில் ஈடுபட்டதால் 'குண்டாஸ்'
தொடர் வன குற்றங்களில் ஈடுபட்டதால் 'குண்டாஸ்'
ADDED : ஜூன் 07, 2025 01:19 AM
ஈரோடு :அந்தியூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட எண்ணமங்கலத்தை சேர்ந்தவர் அம்மாசை, 35; கடந்த மே, 25ல் வன உயிரின குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் மீது பிற வனச்சரகங்களில் வன உயிரின குற்றம், சந்தன மரக்குற்றம், கள்ள நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக பல வழக்குகள் உள்ளன. தொடர் குற்றங்களில் ஈடுபட்டதால், கலெக்டர் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வன உயிரினங்கள், நாட்டு வெடிகுண்டு, கண்ணி வகை பொறிகள், சட்டத்துக்கு புறம்பாக மின் வேலியின் மின்சாரம் செலுத்தி வன உயிரினங்களை கொல்லுதல், நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி வேட்டையாடும் வனக்குற்றங்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவர். வேட்டையாடுவதற்காக சட்ட விரோதமாக வைத்திருக்கும் நாட்டு துப்பாக்கிகளை, சம்மந்தப்பட்ட நபர்களே தாமாக முன்வந்து, சம்மந்தப்பட்ட வனச்சரகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.