அனைத்து வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனை
அனைத்து வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனை
அனைத்து வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனை
ADDED : ஜூன் 07, 2025 01:18 AM
பெருந்துறை, ஈரோடு மே 5 அனைத்து வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம், பெருந்துறையில் நடந்தது. சங்கத்தலைவர் ஜோசப் தலைமை வகித்தார்.
வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு, ஆறு மாதங்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்தில் புதியதாக தலைமை நிலைய செயலாளராக பிரபாகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கூடுதல் செயலாளர் பிரதீப், துணை தலைவர்கள் கந்தவேல் பாண்டியன், சக்திவேல், பொன்ராஜ் கலந்து கொண்டனர்.