ADDED : ஜூலை 21, 2024 09:15 AM
கோபி, : தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், கொங்கு மண்டல விதைகள் மற்றும் உணவுத்திருவிழா, கோபி ராமாயம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
தமிழக உழவர் தொழில்நுட்ப கழக தலைவர் சுந்-தரராமன் தலைமை வகித்து பேசினார். இயற்கை வேளாண்மையில், மத்திய மற்றும் மாநில அரசு-களின் பங்குகள் குறித்து, கோபி வேளாண் அறி-வியல் நிலைய முதன்மை விஞ்ஞானி அழ-கேசன் பேசினார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத்தலைவர் முருகசாமி, கொடிவேரி அணை பவானி நதி பாசன விவசாயிகள் சங்-கத்தின் தலைவர் சுபிதளபதி வாழ்த்துரை நல்-கினர்.
விண்ணியலும், வாழ்வியலும் என்ற தலைப்பில் ஆழியாறு ரவிச்சந்திரன், அடுப்-பில்லா, எண்ணையில்லா சமையல் என்ற தலைப்பில் படையல் சிவா உள்ளிட்ட சிறப்பு பேச்சாளர்கள் பேசினர்.
நமது நிலத்தில் எதை விளைவிக்கிறோம், எதை உண்கிறோம் என்ற தலைப்பில் சிறப்பு விவாத மேடை நடந்தது. தவிர பாரம்பரிய காய்கறி விதை, நாட்டு மாடுகள், கிழங்கு வகைகள், ஆயி-ரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள், உழவனின் பண்டைய பயன்பாட்டு பொருட்கள் காட்சி படுத்தப்பட்டிருந்தன. 200 விவசாயிக-ளுக்கு பாரம்பரிய விதை நெல் பகிர்வு நடந்தது. பாரம்பரிய விதை, கீரை, சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகை, பனை மற்றும் தென்னை மதிப்பு கூட்டுப்பொருட்களும் இடம் பெற்றன. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நி-கழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள், விவசா-யிகள், கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்-றனர்.