ADDED : ஜூன் 06, 2024 04:16 AM
கத்தி முனையில் திருட வந்தஅசாம் மாநில வாலிபர் கைதுசென்னிமலை,: சென்னிமலை அருகே, வாய்ப்பாடி தொய்ய தோட்டத்தை சேர்ந்த கதிர்வேல், தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1:30 மணியளவில் கதிர்வேல் வீட்டிற்குள், மது போதையில் வட மாநில வாலிபர் ஒருவர் நுழைந்து கத்தி முனையில், கதிர்வேல் குடும்பத்தினரை மிரட்டி திருட முயன்றுள்ளார். அப்போது கதிர்வேலை தாக்கியதால் அவர் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, ரகளையில் ஈடுபட்டிருந்த நபரை பிடித்து கை, கால்களை கட்டி வைத்து, சென்னிமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார், அந்த நபரை அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜான் ஜோட்டியா என்பது தெரியவந்ததுசென்னிமலை போலீசார் அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
உணவு பாதுகாப்பு துறைசென்னிமலையில் ஆய்வுசென்னிமலை: சென்னிமலையில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து ஆய்வு மேற்கொண்டது. இதில் ஐந்து கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, 4 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ், உணவு பாதுகாப்பு துறை மூலம் கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.மேலும் கடைகளின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டு, ஒவ்வொரு கடைக்கும் தலா, 25 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தகவலை, சென்னிமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் தெரிவித்தார்.
ரயில் மோதி வாலிபர் பலி ஈரோடு: ஈரோடு-தொட்டிபாளையம் ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட தண்டவாள பகுதியில், வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்துள்ளார்.இறந்தவர், தர்மபுரி மாவட்டம் கொங்கரம்பட்டி கீழ் ஊரை சேர்ந்த பழனி மகன் மோக்னா வினு, 19, என்பது தெரியவந்துள்ளது. இவர் பி.எஸ்சி., கணித பட்டதாரி. தற்போது கவுண்டச்சிபாளையத்தில் தங்கி வேலை தேடி வந்ததும், மொபைல் போன் பேசி கொண்டே ரயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது, அவ்வழியாக வந்த ரயில் மோதி இறந்திருப்பது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஈரோடு ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுப்பாளையம் மாரியம்மன்கோவிலில் பொங்கல் விழாஅந்தியூர், ஜூன் 6-அந்தியூர், புதுப்பாளையத்தில் மஹா மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், பொங்கல் திருவிழா நடக்கும். அந்த வகையில் கடந்த மாதம், 21ல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அன்றிரவு கம்பம் நடப்பட்டது. நேற்று முன்தினம் விளக்கு பூஜை, நேற்று பொங்கல் திருவிழா நடந்தது. அந்தியூர், புதுப்பாளையம், தவிட்டுப்பாளையம், மைக்கேல்பாளையம், கெட்டிசமுத்திரம் சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டு விழாவுடன் பண்டிகை நிறைவடைகிறது.
பவானிசாகர் அணை நீர்மட்டம் 56 அடியை எட்டியதுபுன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணை, 105 அடி உயரமும், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இதன் காரணமாக அணை நீர்மட்டம், 44 அடியாக குறைந்தது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளா பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நீர்வரத்து அதிகரிப்பால், 44 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று காலை, 56 அடியை எட்டியது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து, 987 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 6 டி.எம்.சி.,யாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, 155 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி மது விற்பனைஇரு பெண்கள் கோபியில் கைதுகோபி,: கோபி அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்த இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார், கடத்துார் மற்றும் சிறுவலுார் பகுதியில், நேற்று ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக, உக்கரத்தை சேர்ந்த சரசாள், 45, மற்றும் ரேவதி, 46, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, 66 மதுபாட்டில்களை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.
ஆற்றை கடந்த தொழிலாளிதண்ணீரில் மூழ்கி சாவுபவானி: வெள்ளித்திருப்பூர் அருகே மாத்துார் எட்ரையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 39; தேங்காய் பறிக்கும் கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை, வீட்டிலிருந்து பவானி பகுதியில் தேங்காய் பறிப்பதற்கு சென்றார். காலை 9:00 மணியளவில், பவானி அருகே உள்ள சேர்வராயன்பாளையம் பகுதியில், புதிதாக கட்டி கொண்டிருக்கும் பாலத்திற்கு கீழ் உள்ள பவானி ஆற்றை கடந்து சென்றார். அப்போது, சுழலில் சிக்கி, தண்ணீரில் மூழ்கி இறந்தார். பவானி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பிரேதத்தை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.
மல்லிகை கிலோரூ.580க்கு ஏலம்சத்தியமங்கலம்,: சத்தியமங்கலம், பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை கிலோ, 580 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை, 150, செண்டுமல்லி, 80, கோழிகொண்டை,120, கனகாம்பரம், 500, சம்பங்கி,40, அரளி, 80, துளசி, 40, செவ்வந்தி, 280 ரூபாய்க்கு விற்பனையானது.