/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குமாரபாளையத்தில் அள்ளிய அ.தி.மு.க., மற்ற தொகுதிகளில் அதிகம் பெற்ற தி.மு.க., குமாரபாளையத்தில் அள்ளிய அ.தி.மு.க., மற்ற தொகுதிகளில் அதிகம் பெற்ற தி.மு.க.,
குமாரபாளையத்தில் அள்ளிய அ.தி.மு.க., மற்ற தொகுதிகளில் அதிகம் பெற்ற தி.மு.க.,
குமாரபாளையத்தில் அள்ளிய அ.தி.மு.க., மற்ற தொகுதிகளில் அதிகம் பெற்ற தி.மு.க.,
குமாரபாளையத்தில் அள்ளிய அ.தி.மு.க., மற்ற தொகுதிகளில் அதிகம் பெற்ற தி.மு.க.,
ADDED : ஜூன் 06, 2024 04:16 AM
ஈரோடு,: ஈரோடு லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுக்களின் அடிப்படையில், அ.தி.மு.க., வசமுள்ள குமாரபாளையத்தில், தி.மு.க., பின்னடைவையும், மற்ற, 5 தொகுதியில், அ.தி.மு.க., கணிசமான ஓட்டையும் இழந்துள்ளது.ஈரோடு லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் கே.இ.பிரகாஷ், 5 லட்சத்து, 62,339 ஓட்டுக்கள் பெற்று வென்றார்.
அடுத்தபடியாக அ.தி.மு.க., ஆற்றல் அசோக்குமார், 3 லட்சத்து, 25,773 ஓட்டுக்கள் பெற்றார்.இத்தொகுதியில், மொடக்குறிச்சி சட்டசபை தொகுதி பா.ஜ., வசமும், குமாரபாளையம் அ.தி.மு.க., வசமும், ஈரோடு கிழக்கு, மேற்கு, தாராபுரம், காங்கேயம் தொகுதிகள் தி.மு.க., கூட்டணியிடமும் உள்ளன. இதில் குமாரபாளையம் தொகுதியில் மட்டும் அ.தி.மு.க., 84,323 ஓட்டுக்கள் பெற்றது. அங்கு தி.மு.க., - 74,425 ஓட்டுக்களை பெற்றது. மற்ற, 5 தொகுதியிலும் தி.மு.க., அதிகமாகவும், அ.தி.மு.க., மிக குறைவாக பெற்றது.இதுபற்றி, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:முன்னாள் அமைச்சர் தங்கமணியின் தொகுதி என்பதால், குமாரபாளையத்தை அ.தி.மு.க., கோட்டையாக அவர் வைத்துள்ளார். மற்ற தொகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கு கணிசமான ஓட்டு இருந்தாலும், வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை ஒருங்கிணைக்கவில்லை. இறங்கி பிரசாரம் செய்யவில்லை. பூத் கமிட்டி, நிர்வாகிகளுக்கு தேவையான பணம், உணவு, பிரசாரத்துக்கான நேரத்தை ஒதுக்கவில்லை.ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி உட்பட சீனியர்களை வேட்பாளர் மதிக்கவில்லை. பிரசாரத்துக்கு கட்டாயப்படுத்தி, அழைத்து சென்று ஓட்டாக்கவில்லை. தனியாகவே பிரசாரம் செய்தார். ஒரு கட்டத்தில் ஒதுங்கியதால், 2 லட்சத்து, 36,566 ஓட்டுகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார், இவ்வாறு கூறினர்.தி.மு.க., சீனியர் நிர்வாகிகள் கூறியதாவது: ஈரோடு லோக்சபா தொகுதியில் கடந்த, 2019ல் எதிர் கட்சியாக தி.மு.க., இருந்தபோதே, தி.மு.க.,வில் போட்டியிட்ட கணேசமூர்த்தி, 2.10 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். தற்போது, ஆளும் கட்சியாக இருப்பதுடன் அமைச்சர்களாக ஈரோடு முத்துசாமி, காங்கேயம் சாமிநாதன், தாராபுரம் கயல்விழி செல்வராஜ் என மூவர் உள்ளனர். ஈரோடு கிழக்கு காங்., வசமுள்ளது. அமைச்சர் முத்துசாமிக்கு, கூடுதல் பொறுப்பாக கோவை மாவட்ட கட்சி நிர்வாகமும், அத்தொகுதி பொறுப்பும் வழங்கப்பட்டதால், அவர் இங்கு முழுமையாக களம் இறங்க முடியவில்லை. கடந்த தேர்தலில் கணேசமூர்த்தி, 5 லட்சத்து, 63,591 ஓட்டும் தற்போது, கே.இ.பிரகாஷ், 5 லட்சத்து, 62,773 ஓட்டும் பெற்றுள்ளனர். கடந்த தேர்தலைவிட தி.மு.க., தற்போது, 1,252 ஓட்டுகள் குறைவாகவே பெற்றுள்ளதை, தி.மு.க., பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.அதேநேரம், த.மா.கா., குமாரபாளையம் தவிர அனைத்து தொகுதிகளிலும் தலா, 10,000 ஓட்டுக்கு மேல் பெற்றாலும், 4ம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி சற்று கூடுதலாகவே ஓட்டை பெற்றதால், 3ம் இடத்தையும் பிடித்துள்ளது.