/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கால அவகாசம் முடிந்த விளம்பர பேனர் அகற்றம்கால அவகாசம் முடிந்த விளம்பர பேனர் அகற்றம்
கால அவகாசம் முடிந்த விளம்பர பேனர் அகற்றம்
கால அவகாசம் முடிந்த விளம்பர பேனர் அகற்றம்
கால அவகாசம் முடிந்த விளம்பர பேனர் அகற்றம்
ADDED : ஜூலை 05, 2024 12:44 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில், உரிய அனுமதி இல்லாமலும், ஆபத்தான நிலையிலும் வைக்கப்படும் விளம்பர பலகைகளை, மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து அகற்றி வருகின்றனர்.
மாநகராட்சியில் விளம்பர பலகையின் அதிகபட்ச அளவு, 20 அடி அகலம், 12 அடி உயரம் இருக்க வேண்டும். சாலை சிக்னல்களில் அமைக்க கூடாது என்பது உள்பட பல்வேறு விதிமுறை உள்ளது. ஜி.ஹெச்.ரவுண்டானா பகுதியில், கால அவகாசம் முடிந்ததை அடுத்து, ராட்சத விளம்பர பேனர்களை, மாநகராட்சி நிர்வாகம் நேற்று அகற்றியது. அதேபோல் உரிய அனுமதி, கால அவகாசத்தை கடந்து வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களும் அகற்றப்பட்டன.