/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நிலத்தை அபகரிக்க முயற்சி: எஸ்.பி.,யிடம் மக்கள் மனுநிலத்தை அபகரிக்க முயற்சி: எஸ்.பி.,யிடம் மக்கள் மனு
நிலத்தை அபகரிக்க முயற்சி: எஸ்.பி.,யிடம் மக்கள் மனு
நிலத்தை அபகரிக்க முயற்சி: எஸ்.பி.,யிடம் மக்கள் மனு
நிலத்தை அபகரிக்க முயற்சி: எஸ்.பி.,யிடம் மக்கள் மனு
ADDED : ஜூலை 05, 2024 12:44 AM
ஈரோடு: சத்தி தாலுகாவுக்கு உட்பட்ட, பவானிசாகர் புதுபீர்கடவு பட்டர-மங்கலம் பகுதி மக்கள், ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:பட்டரமங்கலம் கிராமத்தில் பல்வேறு சமுதாய மக்கள் வாழ்கின்-றனர்.
ஒரு சமுதாயத்துக்கு அரசு சார்பில் ஏற்கனவே, 3 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டிருந்தது. இதை அபகரிக்க மாற்று சமுதாயத்-தினர் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் சமுதாய கூடம் கட்ட முனைந்துள்ளனர். மாற்று சமுதாயத்தினருக்கு (பட்டியலின மக்கள்) அரசால் தனி-யாக இடம் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர மற்றொரு பட்டிய-லின சமுதாய மக்களுக்கு, எங்களுக்கு வழங்கிய நிலத்தில் இருந்து, 10 ஆண்டுக்கு முன், 50 சென்ட் நிலத்தை வழங்கி விட்டோம். அவர்களுக்கு ஒரு விநாயகர் கோவிலையும் கட்டி கொடுத்துள்ளோம்.தற்போது கோவில் உள்ள இடத்தில் சமுதாய கூடம் கட்டும் முயற்சியில், கவுன்சிலர் கவிதாவின் கணவர் செல்வன், நந்த-குமார், வரதன், சின்னகண்ணி, வாழை இலை வியாபாரி முரு-கேசன், ஈஸ்வரன், கவிதா, ராஜாத்தி உள்ளிட்ட, 50க்கும் மேற்-பட்டோர் வேலையை துவங்கினர். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வேலையை தொடர்ந்தனர். பேச்சு-வார்த்தை நடத்தி கட்டுமான பணிகளை துவங்கலாம் என்று கூறினோம். ஆனால், செல்வன் உள்ளிட்ட, 50 பேர் கற்களை வீசி தகராறில் ஈடுபட்டு, கொலை மிரட்டலும் விடுத்தனர். பிரச்-னையின் போது பவானிசாகர் இன்ஸ்பெக்டர், தாசில்தார் உள்-ளிட்ட அதிகாரிகள் வந்தனர். இதுதொடர்பாக பவானிசாகர் இன்ஸ்பெக்டரிடம் புகாரளித்-துள்ளோம். அடாவடியில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்-ளனர்.