ADDED : டிச 01, 2025 03:19 AM
ஈரோடு:கொடுமுடி வெங்கம்பூர் தண்ணீர்பந்தல் வீதி வடக்கு புதுபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் சம்பத், 30; திருமணம் ஆகாதவர். நண்பர் பூவேந்திரனுடன் காசிபாளையம் காவிரி ஆற்று படித்துறையில் நேற்று மதியம் மீன் பிடித்து கொண்டிருந்தார்.
குடிபோதையில் இருந்த சம்பத், ஆற்றுக்குள் இறங்கியதில் நீரில் மூழ்கி பலியானார். தீயணைப்பு துறையினர் சம்பத் உடலை மீட்டு, கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.


