ADDED : ஜூன் 04, 2025 01:09 AM
சத்தியமங்கலம், கடம்பூரை அடுத்த அரிகியம் புதுாரை சேர்ந்தவர் சின்னையன் மகன் சிவராஜூ. டிரைவராக உள்ளார். அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இவரது மனைவி நாகேஸ்வரி, 27; வீட்டில் இருந்தவர் நேற்று முன்தினம் அதிகாலை மாயமானார்.
வீட்டிலிருந்து, 10 பவுன் நகை, ௧௦ ஆயிரம் ரூபாயை எடுத்து சென்றதும் தெரிய வந்தது. மருமகளை கண்டுபிடித்து தரக்கோரி, மாமனார் சின்னையன் கடம்பூர் போலீசில் புகாரளித்தார்.