/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிவன்மலை கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய ரூ.26 லட்சம் சிவன்மலை கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய ரூ.26 லட்சம்
சிவன்மலை கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய ரூ.26 லட்சம்
சிவன்மலை கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய ரூ.26 லட்சம்
சிவன்மலை கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய ரூ.26 லட்சம்
ADDED : ஜூன் 19, 2025 01:45 AM
காங்கேயம், சிவன்மலை கோவில் உண்டியல் திறப்பு நடந்தது. கோவிலுக்கு வரும் முருக பக்தர்கள், 26 லட்சத்து, 4,117 ரூபாயை காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலையில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நிரந்தர உண்டியல், திருப்பணி உண்டியல் திருவிழாக்காலங்களில் வைக்கப்படும். கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் உதவி ஆணையர் இளையராஜா, சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் உதவி ஆணையர் ரத்தினாம்பாள் மற்றும் காங்கேயம் சரக ஆய்வர் அபிநயா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.
அதில் பக்தர்கள் காணிக்கையாக 26, லட்சத்து 4,117 ரூபாய், 29 கிராம் தங்க நகை, 490 கிராம் வெள்ளி மற்றும் மலேசியா நாட்டு பணம் செலுத்தப்பட்டிருந்தது. இவற்றை சிவன்மலை கோவில் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது. பணம் என்னும் பணியில் கோவில் ஊழியர்கள், முருக பக்தர்கள் பங்கேற்றனர்.