/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரசு ஐ.டி.ஐ.,களில் நேரடி சேர்க்கைக்கு அழைப்பு அரசு ஐ.டி.ஐ.,களில் நேரடி சேர்க்கைக்கு அழைப்பு
அரசு ஐ.டி.ஐ.,களில் நேரடி சேர்க்கைக்கு அழைப்பு
அரசு ஐ.டி.ஐ.,களில் நேரடி சேர்க்கைக்கு அழைப்பு
அரசு ஐ.டி.ஐ.,களில் நேரடி சேர்க்கைக்கு அழைப்பு
ADDED : ஜூன் 19, 2025 01:45 AM
ஈரோடு, ஈரோடு மற்றும் கோபி அரசு ஐ.டி.ஐ.,களில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பொறியியல் எலக்டரீஷியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், டெக்ஸ்டைல்ஸ், மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள், ஏ.சி., மெக்கானிக், பொறியியல் அல்லாத தொழில் பிரிவு, இண்டஸ்டரி 4.0 திட்ட தொழில் பிரிவுகளிலும் நேரடியாக சேரலாம்.
மேலும், 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் ஒயர் மேன், வெல்டர் தொழில் பிரிவில் கடந்த, 19 முதல் நேரடி சேர்க்கை நடக்கிறது.
பயிற்சி பெறுவோருக்கு பயிற்சியுடன் மாத உதவித்தொகை, 750 ரூபாய், இலவச சைக்கிள், சீருடை உட்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்படும். தகுதியான மாணவ, மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். கூடுதல் விபரத்துக்கு ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,யை, 0424 2275244, 70108 75256 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.