ADDED : ஜூன் 15, 2024 07:27 AM
ஈரோடு : ஈரோடு கீழ்பவானி வடிநிலக் கோட்டம், மொசக்கரடு கிளை கால்வாய் மூலம், முள்ளம் பரப்பு, தட்டான்குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 1,500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. இந்நிலையில் மொசக்கரடு கிளை கால்வாய், சில ஆண்டுகளாக துார்வாரப்படாமல் பல இடங்களில் வேலி முட்கள் முளைத்து, புதர் மண்டி கிடக்கிறது. இதனால் கடைக்கோடி விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லாமல், பயிர்கள் கருகும் நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து கலெக்டர், பொதுப்பணித்துறை என அனைத்து தரப்பினரிடம் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.