Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கட்டுமான பொருள் கண்காட்சி துவக்கம்

கட்டுமான பொருள் கண்காட்சி துவக்கம்

கட்டுமான பொருள் கண்காட்சி துவக்கம்

கட்டுமான பொருள் கண்காட்சி துவக்கம்

ADDED : ஜூன் 28, 2025 07:46 AM


Google News
ஈரோடு : பிசினஸ் இந்தியா எக்ஸ்சிபிஷன் நிறுவனம் சார்பில், கன்ஸ்ட்ரக்டிவ்-2025 கட்டுமான பொருட்கள், இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் அலங்கரிப்பு, ஹோம்டெக்கர்ஸ் மற்றும் பர்னிச்சர்களுக்கான மாபெரும் கண்காட்சி, ஈரோட்டில் பெருந்துறை சாலையில் பரிமளம் மஹாலில் நேற்று தொடங்கியது.

வீடுகள் கட்ட திட்டமிடுவோர், ஆர்க்கிடெக்ட், பில்டர்கள், இண்டீரியர் டெக்கரேட்டர், சிவில் மற்றும் ஸ்டக்ட்சுரல் என்ஜினியர், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் கட்டுமான வல்லுனர்கள், பிராப்பர்ட்டி டெவலப்பர், காண்ட்ராக்டர்கள் மற்றும் கன்சல்டன்ட்கள் என ஆயிரக்கணக்கானோர் பார்வையிட உள்ளனர்.

கண்காட்சியில், பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம், 2.67 லட்சம் ரூபாய் வரை மானியம் பெற, வங்கிகள் மற்றும் வீட்டுக்கடன் நிறுவனங்களின் ஆலோசனை, மக்களுக்கு கட்டுமான செலவை குறைப்பது பற்றிய ஆலோசனை, மிகமிக குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் பெறவும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

தினமும் காலை, 10:30 மணிக்கு தொடங்கும் கண்காட்சி, இரவு, 8:30 மணி வரை இடைவெளியின்றி, நாளை வரை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us