/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கல்லுாரி பஸ் டிரைவர் கிணற்றில் சடலமாக மீட்பு கல்லுாரி பஸ் டிரைவர் கிணற்றில் சடலமாக மீட்பு
கல்லுாரி பஸ் டிரைவர் கிணற்றில் சடலமாக மீட்பு
கல்லுாரி பஸ் டிரைவர் கிணற்றில் சடலமாக மீட்பு
கல்லுாரி பஸ் டிரைவர் கிணற்றில் சடலமாக மீட்பு
ADDED : ஜூன் 16, 2025 03:48 AM
பவானி: அம்மாபேட்டை அருகே செம்படாம்பளையம், கூச்சிக்கல்-லுாரை சேர்ந்தவர் தினேஷ்குமார், 30; இவரின் மனைவி சரோஜா, 28; தம்பதிக்கு ஐந்து வயதில் மகன் உள்ளார். மேச்சே-ரியில் உள்ள தனியார் கல்லுாரி பஸ் டிரைவராக தினேஷ்குமார் பணி செய்தார்.
நேற்று முன்தினம் மதியம் வீட்டை விட்டு சென்-றவர், இரவாகியும் வீடு திரும்பவில்லை. நள்ளிரவில் தினேஷ்குமாரின் பைக், அதே பகுதியில் உள்ள கிணற்றில் அருகில் நிற்பது தெரிய வந்தது. அந்தியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடியதில், தினேஷ்குமாரின் உடல் மீட்கப்பட்டது. அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்-லது வேறு ஏதேனும் விவகாரமா? என்பது குறித்து அம்மா-பேட்டை போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.