/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 20ல் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்கம் 20ல் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்கம்
20ல் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்கம்
20ல் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்கம்
20ல் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்கம்
ADDED : ஜூன் 18, 2025 01:11 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், வரும், 20 முதல், 26ம் தேதி வரை நடக்கவுள்ளது.
இதன்படி, 20ல் பவானி தொகுதி பட்லுார் பொம்மன்பட்டி சமுதாய கூடம், குருவரெட்டியூர் பாலகணவனுார் சமுதாய கூடம், முகாசிபுதுார் வி.பி.ஆர்.சி., கட்டட வளாகம், சின்னபுலியூர் தளவாய்பேட்டை கொங்கு செட்டியார் திருமண மண்டபம், பெரியபுலியூர் எஸ்.எச்.ஜி., கட்டடத்தில் நடக்கிறது.
வரும், 24ல் கவுந்தப்பாடி சந்தைபேட்டை சமுதாய கூடம், ஓடத்துறை சூரியம்பாளையம் சிவகாமி மஹால், அந்தியூர் தொகுதி மைக்கேல்பாளையம் க.மேட்டூர் கே.எம்.பி., மண்டபம், பச்சாம்பாளையம் செந்துார் மண்டபம், வேம்பத்தி அம்மன் நகர் சமுதாய கூடம், வரும், 25ல் நகலுார் கொண்டையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எண்ணமங்கலம் ஆலங்காடு வி.பி.சி.ஆர்., கட்டட வளாகம், பர்கூர் தாமரைகரை சமுதாய கூடத்தில் நடக்கிறது.
வரும், 26ல், பவானி தொகுதி குறிச்சி வாரச்சந்தை அருகே சமுதாய கூடம், தொட்டிபாளையம் தாளப்டையனுார் கொங்கு மஹால், மைலம்பாடி பருவாச்சி காந்தி நகர் தென்றல் மஹால், அந்தியூர் தொகுதி சென்னிம்பட்டி காலனி சமுதாய கூடம், வெள்ளித்திருப்பூர் ரெட்டிபாளையம் பி.யூ.எம்.எஸ்., ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.