ADDED : ஜூன் 18, 2025 01:12 AM
ஈரோடு, நசியனுார் அருகே ராயபாளையத்தை சேர்ந்த மக்கள் பழனிசாமி தலைமையில் வந்து, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:
ராயபாளையம் பகுதி, ஈரோடு மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ளவர்கள் அனைத்து தேவை, வேலை, படிப்புக்கும் ஈரோடு மாநகரப்பகுதிக்கு சென்று வர வேண்டி உள்ளது.
இப்பகுதிக்கு காலை, 7:00 மணிக்கு ஒரு பஸ் வந்து செல்கிறது. மற்ற நேரங்களில் தேவையான அளவு பஸ் வசதி இல்லை. 4 கி.மீ., துாரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டும்.
இரவு நேரங்களில் பஸ் ஏற செல்வதும், இறங்கி நடந்து வருவதும் சிரமமாக உள்ளது. பொது போக்குவரத்தை மக்கள் வசிக்கும் பகுதிக்கு இயக்கும் நோக்குடன், புதிய பஸ்கள் இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.