/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நந்தா பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் வளாகத்தேர்வுநந்தா பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் வளாகத்தேர்வு
நந்தா பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் வளாகத்தேர்வு
நந்தா பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் வளாகத்தேர்வு
நந்தா பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் வளாகத்தேர்வு
ADDED : ஜூலை 25, 2024 01:20 AM
ஈரோடு: ஈரோடு நந்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளின் சார்பில் இறுதியாண்டு படித்து, வெளியேறும் மாணவர்களுக்-கென, சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், 'ஜாஸ்மின் இன்போ டெக்' நிறுவனத்தின் வளாக தேர்வு கல்லுாரியில் நடந்தது.ஸ்ரீ நந்தா அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார்.
நந்தா கல்வி நிறுவன முதன்மை கல்வி அதிகாரி முனைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். சிறப்பாளராக பங்-கேற்ற ஜாஸ்மின் இன்போ டெக் நிறுவன மனிதவள மேலாளர் கருணாநிதி குத்துவிளக்கேற்றி வைத்தார். பின் அவர் பேசு-கையில், ''ஜப்பான், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடு-களில் செயல்பட்டு வரும் எங்கள் ஆய்வகங்கள் மூலம் சமிக்ஞை செயலாக்கம் மற்றும் ஆடியோ நிபுணத்திற்கு தேவையான மென்-பொருள் தீர்வுகளை அளித்து வருகிறோம். இவற்றில் ஆடியோ கேட்கும் அறை, ட்யூனர் ஆய்வகம், நெட்வொர்க்கிங் ஆய்வகம், வாகன இடைமுக ஆய்வகம், சோதனை ஆய்வகம் போன்ற ஆய்-வகங்கள் அடங்கும்,'' என்றார். இறுதியாண்டு படித்து வெளி-யேறும் மின்னியல், மின்ணணுவியல் மற்றும் தொடர்பியல் துறை-களை சார்ந்த, 240க்கும் மேற்பட்ட மாணவ-, மாணவிகள் கலந்து கொண்டனர். வளாக தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்த கல்லுாரி வேலைவாய்ப்பு அலுவலக ஆசிரியர்களை, ஸ்ரீ நந்தா கல்வி அறக்-கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவன செயலாளர் திருமூர்த்தி, பொறியியல் கல்லுாரி முதல்வர் ரகுபதி, தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் நந்தகோபால், நந்தா தொழில்-நுட்ப வளாக நிர்வாக அலுவலர் வேலுசாமி ஆகியோர் பாராட்-டினர்.