/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 54 அரசு நிதியுதவி பள்ளிகளில் விரைவில் காலை உணவு திட்டம் 54 அரசு நிதியுதவி பள்ளிகளில் விரைவில் காலை உணவு திட்டம்
54 அரசு நிதியுதவி பள்ளிகளில் விரைவில் காலை உணவு திட்டம்
54 அரசு நிதியுதவி பள்ளிகளில் விரைவில் காலை உணவு திட்டம்
54 அரசு நிதியுதவி பள்ளிகளில் விரைவில் காலை உணவு திட்டம்
ADDED : ஜூன் 27, 2025 01:05 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகரப்பகுதியில் இயங்கும் 54 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் விரைவில் விரிவுப்படுத்தப்பட உள்ளது.
தமிழக அரசு தொடக்கப்பள்ளிகளில் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவிப்பெறும் தொடக்க பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, -மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், 2022 முதல் செயல்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகள், ஊரக பகுதிகளில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ--மாணவியர், 49,400 பேர் பயன்பெற்று
வருகின்றனர்.
முதல்வரின் காலை உணவு திட்டத்தை நகர்ப்புற பகுதிகளில் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு செயல்படுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக தொடக்க கல்வி இயக்குநர் முடிவுப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட
உள்ளது.
மாவட்டத்தில் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளில், 54 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் தேர்வு செய்யப்
பட்டுள்ளன.
சத்துணவு திட்ட அலுவலர்கள் கூறுகையில், '54 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டத்தினை விரிவுப்படுத்திட பரிந்துரை அளித்துள்ளோம். இப்பள்ளிகளை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகமும் உறுதி செய்து அரசுக்கு அனுப்பியுள்ளது. அரசு அறிவிக்கும் நாளில் நகர்ப்புற அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்' என்றனர்.