ADDED : ஜூன் 07, 2024 12:10 AM
ஈரோடு: ஈரோடு அருகே, 46 புதுார் நொச்சிக்காட்டு வலசில், வெள்ளைபாறை முனியப்பசுவாமி கோவில் உள்ளது.
இது அறநிலையத்துறைக்கு உட்பட்டது. கோவிலில் சுவாமி அருகேயும், நுழைவு வாயில் கதவு அருகேயும் தலா ஒரு உண்டியல் உள்ளது.பூசாரி ஈஸ்வரன் நேற்று அதிகாலை வழக்கம்போல் கோவிலை திறந்து பூஜை நடத்த வந்தார். சுவாமி அருகேயுள்ள உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டது தெரிந்தது. உண்டியலில், 40 ஆயிரம் ரூபாய் இருக்கலாம் என தெரிகிறது. அப்பகுதியில் ஒரு வீட்டில் இருந்த 'சிசிடிவி' கேமரா பதிவுகளை, தாலுகா போலீசார் ஆய்வு செய்தனர். இதில் நள்ளிரவில் ஆசாமி ஒருவர், கோவிலுக்குள் சுவர் ஏறி குதித்து வந்து செல்வது தெரிய வந்தது. கைவரிசை காட்டிய ஆசாமியை, போலீசார் தேடி வருகின்றனர்.