/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கீழ்பவானியில் பணி துவங்காவிட்டால் நீர்வளத்துறை அலுவலகம் முற்றுகைகீழ்பவானியில் பணி துவங்காவிட்டால் நீர்வளத்துறை அலுவலகம் முற்றுகை
கீழ்பவானியில் பணி துவங்காவிட்டால் நீர்வளத்துறை அலுவலகம் முற்றுகை
கீழ்பவானியில் பணி துவங்காவிட்டால் நீர்வளத்துறை அலுவலகம் முற்றுகை
கீழ்பவானியில் பணி துவங்காவிட்டால் நீர்வளத்துறை அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூலை 05, 2024 12:45 AM
ஈரோடு: கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க கூட்டம் ஒருங்கிணைப்-பாளர் ரவி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு, தமிழக விவசாயிகள் சங்க மாநில கவுரவ தலைவர் வெங்கடாசலம் முன்-னிலை வகித்தனர்.கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிக்காக தமிழக அரசு வெளி-யிட்ட அரசாணை எண்: 60க்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தப்பட்-டுள்ளது. நீதிமன்றத்தில் முறையிட்டு, தடையாணையை விலக்க அரசு நடவடிக்கை எடுத்து, சீரமைப்பு பணியை துரிதமாக செயல்-படுத்தி முடிக்க வேண்டும். பவானிசாகர் அணையில் நீர் இருப்-புக்கு ஏற்ப, 3 பாசனங்களுக்கும் ஒரே அரசாணையில் சம காலத்தில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். பவானிசாகர் அணை அருகே குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் எடுப்பதை கைவிட வேண்டும். நீதிமன்றத்தில் உரிய வழிகாட்டுதல் பெற்று, கீழ்பவானி வாய்க்-காலில் சீரமைப்பு பணிகளை, வரும், 10ல் துவங்க வேண்டும். அல்லது வரும் 11ல் நீர் வளத்துறை அலுவலகத்தை முற்றுகையி-டுவது என தீர்மானம் நிறைவேற்றினர்.
* ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த நிலக்கடலை ஏலத்துக்கு, 138 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ, 63.56 ரூபாய் முதல் 76.20 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், ௩.௧௪ லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜமுனா தெரிவித்தார். இதேபோல் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த நிலக்கடலை ஏலத்துக்கு, 329 மூட்டைகள் வந்தன. இதில் காய்ந்த நிலக்கடலை கிலோ, 67.69 - 78.12 ரூபாய் வரை, 7.97 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.* புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியா-ழக்கிழமை கூடுகிறது. கறவை, கலப்பின மாடுகள், எருமை, கன்-றுகள் உள்பட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படு-கின்றன. நேற்று கூடிய சந்தைக்கு, 10 எருமை, 200 கலப்பின மாடு, 80 கன்றுகள், 220 ஜெர்சி மாடுகளை, விவசாயிகள் கொண்டு வந்தனர். எருமைகள் 20-32 ஆயிரம் ரூபாய், கறுப்பு வெள்ளை மாடு, 22-43 ஆயிரம் ரூபாய், ஜெர்சி, 23-49 ஆயிரம், சிந்து, 20-44 ஆயிரம், நாட்டுமாடு, 40-76 ஆயிரம் ரூபாய் வரை, விற்றது. வளர்ப்பு கன்றுகள் 6,000 முதல், 15 ஆயிரம் வரையும் விற்பனையானது. அதேபோல், 200க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்-பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10 கிலோ வெள்ளாடு ஒன்று, 7,000 ரூபாய் வரை, 10 கிலோ செம்மறி ஆடுகள், 6,500 ரூபாய் வரையும் விற்பனையானது. * கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்-கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. ஏலத்தில், கதளி ஒரு கிலோ, 52 ரூபாய், நேந்திரன், 40 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 670, தேன்வாழை, 710, செவ்வாழை, 1,200, ரஸ்த்-தாளி, 630, பச்சைநாடான், 460, ரொபஸ்டா, 500, மொந்தன், 410 ரூபாய்க்கும் விற்றது.