/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கார் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் பலி கார் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் பலி
கார் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் பலி
கார் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் பலி
கார் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் பலி
ADDED : மே 22, 2025 01:56 AM
தாராபுரம், தாராபுரம் அடுத்த மரவபாளையத்தை சேர்ந்தவர் காளிராஜ், 44, பெயின்டரான இவர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், சிடி 100 பைக்கில், வேங்கிபாளையம் பிரிவு அருகே, சாலையை கடக்க முயன்றார். அப்போது, திருப்பூரை சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டி வந்த ஷிப்ட் கார், எதிர்பாராத விதமாக காளிராஜ் சென்ற பைக்கில் மோதியது.
இதில், படுகாயம் அடைந்த காளிராஜ், சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.