/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/'பள்ளி வளாகத்தில் பாம்பு' புதரை அகற்றினால் நல்லது'பள்ளி வளாகத்தில் பாம்பு' புதரை அகற்றினால் நல்லது
'பள்ளி வளாகத்தில் பாம்பு' புதரை அகற்றினால் நல்லது
'பள்ளி வளாகத்தில் பாம்பு' புதரை அகற்றினால் நல்லது
'பள்ளி வளாகத்தில் பாம்பு' புதரை அகற்றினால் நல்லது
ADDED : ஜூன் 21, 2024 07:40 AM
பவானி: வெள்ளித்திருப்பூர் அருகே செல்லம்பாளையத்தில் அரசு மாதிரிப்பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு ஆறு முதல் பிளஸ் 2 வரை, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் ஊர்ந்து வந்த ஒரு பாம்பு, வகுப்பறைக்கு வெளியே மாணவர்கள் விட்டிருந்த செருப்புகள் நடுவில் புகுந்து விட்டது. இதைப்பார்த்த மாணவர்கள், ஆசிரியையிடம் கூறவே, வளாகத்தில் இருந்து பாம்பை ஆசிரியர்கள் விரட்டினர். பள்ளியை சுற்றி புல், புதர் வளர்ந்து புதராக உள்ளது. அங்கு விஷ ஜந்துக்கள் வசிக்க வாய்ப்பு அதிகம். எனவே, பள்ளி வளாகத்தில் மீண்டும் பாம்பு வருவதை தடுக்க, புதர்களை சுத்தம் செய்ய, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.